பல தசாப்தங்களில் காணாத மழைவெள்ளம் கொரியத் தலைநகரை ஆட்டிப் படைத்தது.
திங்களன்று மாலை கொரியாவின் தலைநகரான சீயோலைப் பெரும் மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும் தாக்கிப் பெரும் சேதங்களை விளைவித்தன. நகரின் பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டு எட்டுப் பேர் உயிரிழந்தார்கள். சுமார் 100 – 141 மி.மீற்றர் மழையால் நகரம் செயலிழந்திருந்ததாக நாட்டின் வானிலை அவதானிப்பு நிலைய அறிக்கை குறிப்பிடுகிறது.
காலநிலை மாற்றத்தின் விளைவாகவே பல தசாப்தங்கள் காணாத மழைவீழ்ச்சி சியோல் நகரைத் தாக்கியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். போக்குவரத்து வீதிகளும் சுரங்கங்களும் நீரால் நிறைந்துபோய்க் கட்டிடங்கள் இடிபாடுகளைக் காண, நகரின் பல பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் போக நகரின் பணக்காரப் பகுதியான Gangnam இல் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
திங்களன்று ஆரம்பித்த மழைவீழ்ச்சி குறையாத பலத்துடன் பல நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை அறிக்கை குறிப்பிடுகிறது. சுமார் 26 மில்லியன் மக்கள் வாழும் பகுதிகள் கடும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்