பல்கலைக்கழக ஒன்றிய ஏற்பாட்டாளர் மீது 90 நாள் விசாரணைக்கு ரணில் கொடுத்த அனுமதி
கடந்த 18ம் திகதி நடந்த ஆர்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே வேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவருடைய பாதுகாப்பையும் உறுதிப் படுத்தக்கோரி அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகத்திற்குச்சென்று ஆர்ப்பாட்டம் நடந்தது முதல் இன்று வரை அரசாங்கம் மேற்கொண்ட அடக்கு முறைகள் தொடர்பான ஆவணத்தை கையளித்துள்ளனர்.
அதே நேரம் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதை இடை நிறுத்த கோரி களனி பல்கலை கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதே நேரம் இலங்கையில் பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்ற போர்வையில் ஆர்ப்பாட்டக் காரர்கள் கைது செய்யப்படுவது கவலை அளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.