எதிர்பார்க்கப்பட்டது போலவே உக்ரேன் மீது சுதந்திர தினத்தன்று தாக்கியது ரஷ்யா.
நேற்று ஆகஸ்ட் 24 ம் திகதி உக்ரேன் தனது 31 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடச் சில நாட்களுக்கு முன்னரே அந்த நாளாகாகப் பார்த்து ரஷ்யா நிச்சயமாக எங்காவது தாக்குதல் நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டது. அதனால், நாட்டில் எங்குமே மக்கள் பெருமளவில் கூடிக் கொண்டாடுவது தடை செய்யப்பட்டிருந்தது. நாள் முழுவதும் உக்ரேன் மக்களும், அரசும், ஜனாதிபதியும் உலக நாடுகளின் வாழ்த்துக்களைப் பெற்றார்கள். மாலையில் தாக்கப்பட்டது உக்ரேன் ரயில் நிலையமொன்று 20 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
உக்ரேனிலிருந்து தாம் பிரிந்ததாக அறிவித்த டொனெட்ஸ்க் பிராந்தியத்திலிருந்து 145 கி.மீ தூரத்திலிருக்கும் சப்ளின் நகரத்தின் ரயில் நிலையமொன்றின் மீது புதனன்று மாலையில் ரஷ்யக் குண்டுகள் வீழ்ந்தன. தலைநகரான கியவ் மீது இரவு குண்டுகள் விழுந்ததாக நகர ஆளுனர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவை எங்கிருந்து வந்தன ஏதாவது இழப்புக்கள் ஏற்பட்டனவா என்பது பற்றித் தெரியவில்லை.
போரில் இறந்துபோன இராணுவ வீரர்களின் சமாதியொன்றில் நீல, மஞ்சள் பூக்களை வைத்து உக்ரேன் ஜனாதிபதி சுதந்திர தின நிகழ்ச்சியில் நாட்டின் வீரர்களை கௌரவப்படுத்தினார்.
“இவ்வருடம் பெப்ரவரி 24 ம் திகதி முதல் ஒரு புதிய நாடு உதயமானது. எங்களைத் தாக்கியவர்கள் நாம் அவர்களைப் பூக்களைக் கொடுத்து வரவேற்போம் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ மொலட்டோல்கொக்டெய்ல்,” என்று தனது உரையில் கூறிய செலென்ஸ்கி உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்கள் அனைத்தையும் திரும்பப் போரிட்டுப் பெறுவோம் என்று சூளுரைத்தார். 2014 ம் ஆண்டு ரஷ்யர்கள் கைப்பற்றிய கிரிமியாத் தீபகற்பத்தையும் மீட்டெடுப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்