போகும் வழி இனி வெற்றிப்பாதை | கவிநடை
வாழ்க்கையில் இன்று நீ செய்யும் சிறிய தவறு நாளை பெரிய தவறாக மாறி வாழ்க்கையைக் கெடுத்துவிடும்…
தவறு செய்வது இயல்பு…
தவறை மாற்றுவது அரிது…
தெரியமால் செய்யும் பிழை விட…
தெரிந்து செய்யும் தவறுகள் தான்…
நீ சொல்வதை தான் மனம் கேட்க வேண்டும்…
மனம் சொல்வதைக் கேட்கக் கூடாது…
தவறான வழியில் செல்வதை விட சரியான வழியை தேர்ந்தெடுத்து சென்றுக்கொண்டே இரு…
கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்…
இனி கடக்கும் பாதை தெரியும்…
கடந்து வந்த பாதையில் பல தடைகளும் பல வலிகளும் இருந்திருக்கும்…
உன் வாழ்க்கையில் போகும் வழிகள் கடக்கும் பாலமாக அமையும்…
எழுதுவது : மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)சேலம்.