ஊழல்களில் ஈடுபட்டதால் இம்ரான் கான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என்ற தேர்தல் ஆணையம்..
ஆளும் கட்சியான முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த ஒருவர் ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதை விசாரித்த பின்னர் இம்ரான் கான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்க அருகதை உள்ளவரல்ல என்று ஒரேமுகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு ராஜதந்திரிகள் மூலமாகத் தான் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுகளை இம்ரான் கான் சொந்தமாக்கியதாகக் கொடுக்கப்பட்ட முறையீட்டைத் தொடர்ந்தே அந்த நபர் தேர்தல் ஆணையத்திடம் போயிருந்தார். மேலும் ஐந்து வருடங்களுக்குப் பொதுச்சேவையில் ஈடுபடவும் இம்ரான் கான் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இம்ரான் கான் கட்சியினர் உடனடியாக தேர்தல் ஆணையத்தின் முடிவு பாகிஸ்தானுக்கும், அதன் மக்களுக்கும் முகத்திலடிப்பது போன்றது என்று குற்றஞ்சாட்டினர். தாஹ்ரில் எ இஸ்லாம் கட்சித் தலைமை அதை இஸ்லாமாத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதுடன் எதிர்த்துக் குரலெழுப்பும்படி கட்சி ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
ராஜதந்திரிகளிடம் பெற்றுக்கொள்ளும் பரிசுகளை அதிகாரத்தில் இருப்பவர் பாகிஸ்தான் அரசின் உடமையாகவே ஏற்றுக்கொள்கிறார். அதைத் தனது சொந்தமாக்குவது சட்டவிரோதமானது. அதை இம்ரான் கானும் அவரது மனைவியும் மீறிப் பரிசுகளைக் குறைந்த விலைக்கு விற்றுப் பணத்தைத் தமதாக்கினர். வரிவிதிப்பிலிருந்து தப்புவதற்காக அப்பணத்தைக் கணக்கில் காட்டவுமில்லை. குற்றஞ்சாட்டு இம்ரான் அரசு பதவி விலகியதிலிருந்தே எழுந்திருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்