யாசகர் | கவிநடை

வறுமையில் உடலும் வலிமையற்றுப் போனதோ…//

கடக்கும் பாதைகள் எங்கும் கண்கள்
தேடியே ஓடின…//

ஒருவேளை உணவிற்கு
ஊசலாடும் உயிர்கள்…//

ஞாலம் முழுதும் நிலைத்தே நிறைந்தன…//

கொடுக்கும் கைகள் இன்று குறைந்த மாயமென்ன…//

கூடி வாழும் பண்பும் குன்றி இங்குபோனதால்…//

முதுமை இன்று இங்கே முச்சந்தியில்…//

யாசகம் கேட்டு யாக்கையுடன் போராடுது…//

தூக்கி எறியும் உணவிற்கு தூரத்தில் வாடும் குழந்தைகள்…//

துரத்தும் பசியின் கயிறுகள் வயிற்றுள் சுழலும்…//

பகட்டு வாழ்வின் பதார்த்தங்கள் பாதங்களில் மிதிபடும்…//

பன்னாட்டு உணவு பண்டங்கள் பறந்து விரிந்ததிங்கே…//

பசித்த வயிறு புசிக்க வழி இன்றி…//

புலன்கள் வாடி கலன்கள் ஏந்தி காத்திருக்கின்றன…//

எழுதுவது : கவிஞர்
ராசாத்தி பெ.மாலையம்மாள்
ஸ்ரீ வில்லிபுத்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *