சிறீலங்காவில் 22 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான வாக்கொடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்று அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேறியது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது , குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகள் விழுந்தன.
முன்னதாக இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் காலை முதல் நாடாளுமன்றில் தொடராக இடம்பெற்றிருந்தது,
அதேபோல நேற்றையநாளும் விவாதம் நடைபெற்றிந்தது.
அதனைத்தொடர்ந்து அரசியல் அமைப்பின் 22 ஆம் திருத்த சட்டமூலம் , 178 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.