சோவியத் கால மொஸ்க்விச் கார்களை மீண்டும் தயாரிக்க ஆரம்பிக்கிறது ரஷ்யா.

தலைநகரான மொஸ்கோவில் இருந்த முன்னாள் தொழிற்சாலை மண்டபமொன்றில் முன்னாள் சோவியத் கார்களை மீண்டும் தயாரிக்கப் போகிறது ரஷ்யா. மொஸ்க்விச் [Moskvich] என்றழைக்கப்படும் சோவியத் யூனியன் கால கார்களின் தொழில்நுட்பத்துடன் வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருக்க்கிறது.

அந்தக் கட்டடத்தில் பிரான்ஸ் ரெனோல்ட் நிறுவனத்துடன் கூட்டாக முன்பு வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பால் மேற்கு நாடுகள் ரஷ்யாவில் தமது வர்த்தகங்களை நிறுத்திக்கொண்டன. எனவே, மே மாதத்தில் அந்தக் கட்டடம் ரஷ்ய அரசுக்கு ஒரு ரூபிள் விலைக்கு விற்கப்பட்டது. அது ஒரு ரூபிள் விலைக்கு மொஸ்கொவிச் ஆட்டொமொபைல் நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. அத்தொழிற்சாலையில் அந்தக் கார்கள் தயாரிக்கப்படவிருக்கின்றன.

முதல் கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 600 மொஸ்க்விச் கார்கள் அங்கே தயாரிக்கப்படவிருக்கின்றன. டிசம்பர் மாதத்திலிருந்து கார்கள் வரிசையில் தயாரிக்கப்பட ஆரம்பிக்கும். வருடத்துக்கு 100,000 கார்கள் தயாரித்தல் அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் குறியாக இருக்கும் என்றும் அவைகளில் ஒரு பகுதி மின்சாரத்தால் இயங்குபவையாக இருக்கும் என்றும் அதன் நிர்வாகி கமாஸ். 

சாதாரண கார்த் தொழிற்சாலைகளில் வருடத்துக்கு 200,000 – 300,000 கார்கள் வரிசையில் தயாரிக்கப்படுகின்றன. நவீனப்படுத்தப்பட்ட மொஸ்க்விச் கார்கள் அந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட தற்போதைக்குத் திட்டமில்லை என்றும் கமாஸ் தெரிவித்தார்.

சீனக் கார் தயாரிப்பாளர்களான JAC யின் தயாரிப்புத் திட்டங்கள், வடிவமைப்புகள் மொஸ்க்விச் கார்கள் தயாரிப்பில் உபயோகிக்கப்படும் என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *