உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பையின் நகல் 2025 மொரொக்கோவில் நடாத்தப்படும்.

சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் உலகக்கிண்ணத்துக்கான மோதல்கள் கத்தாரில் நடந்துகொண்டிருக்கின்றன. அதன் நகலாக ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட Club World Cup மோதல்கள் 2025 இல் மொரொக்கோவில் நடாத்தப்படவிருப்பதாக சம்மேளனத்தின் அதிபர் ஜியானி இன்பண்டீனோ டொஹாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

 Club World Cup உதைபந்தாட்ட மோதல்கள் என்பது திடீரென்று பிறந்த திட்டமல்ல. தேசிய அணிகளல்ல, உதைபந்தாட்ட அணிகளே பங்குபற்றும் மோதல்கள் அவை. 2013, 2014 ம் ஆண்டுகளில் மொரொக்கோவில் அவை நடைபெற்றிருக்கின்றன. இறுதியாக இவ்வருட பெப்ரவரியில் எமிரேட்ஸில் 24 அணிகள் மோதியதில் செல்ஸி அணி கோப்பையை வென்றது. 2021 இல் அந்த சீனாவில் அந்த மோதல்களை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், கொரோனாத்தொற்றுக்களின் காரணமாக அது கைவிடப்பட்டது.

உதைபந்தாட்ட உலகின் அணிகளுக்கான கிண்ணத்தை வென்றெடுக்கும் போட்டிகளில் தொடர்ந்தும் ஐரோப்பாவின் 8 அணிகள் உட்பட  32 அணிகள் பங்கெடுக்கும். தற்போது 24 அணிகள் பங்கெடுக்கும் அந்தக் கோப்பை மோதல்களில் 32 அணிகளைப் பங்கெடுக்கச் சேர்த்துக்கொள்வதும் ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டிருந்தது என்று இன்பண்டீனோ தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *