தாமிருவரும் 1968 இல் சினிமாவுக்காக நிர்வாணப்படுத்தப்பட்டதுக்காக சினிமா நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் நடிகர்கள்.

1968 இல் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற  சினிமா ”Romeo & Julia”. பாரமவுண்ட் நிறுவனத்துக்காக பிராங்கோ ஸெபரெல்லி அந்தச் சினிமாவை இயக்கியிருந்தார். அச்சினிமாவில் நடித்த ஒலீவியா ஹஸ்ஸியும், லியொனார்ட் விட்டிங்கும் அச்சமயத்தில் முறையே 15, 16 வயதுடையவர்களாக இருந்தனர். தரப்பட்ட உறுதியையும் மீறிச்  சினிமாவில் தாம் நிர்வாணமாக நடிக்கவைக்கப்பட்டதாக அவர்கள் பாரமவுண்ட் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.

சினிமாவில் நிர்வாணக் காட்சி எதிலும் அவ்விருவரும் நடிக்க வேண்டியதில்லை என்று உறுதி கூறப்பட்டது. ஆனால், அவர்களிருவரையும் நிர்வாணமாக இயக்குனர் நடிக்கவைத்துப் படமாக்கினார். அச்சமயத்தில் அவர்களுடைய பிரத்தியேக உறுப்புக்கள் சினிமாவில் வெளியிடப்படாது என்று உறுதிகூறியிருந்தும் ஒலீவியாவின் மார்புகளும், லியொனார்டின் பின்பக்கமும் சினிமாவில் காணக்கூடியதாக இருந்தது.

தாம் இளவயதில் தமக்குச் சொல்லப்பட்டதை நம்பியதாகவும் சினிமா நிறுவனம் தம்மை ஏமாற்றிவிட்டது என்றும் அவர்களிருவரும் குறிப்பிடுகிறார்கள். தற்போது 71, 72 வயதான அவர்கள் சினிமாவின் வெற்றியானது தம்மை நிலைகுலையவைத்து விட்டதாகவும், நிர்வாணக் காட்சிகள் தம்மை அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இயக்குனர் பிராங்கோ ஸெபரெல்லி 2019 இல் மரணமடைந்து விட்டார். பாரமவுண்ட் நிறுவனம் இதுவரை தம்மீது போடப்பட்டிருக்கும் வழக்கைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *