“மடா 9|Mada-9” ஆப்கான் தயாரித்த நவீன கார்| பொதுமக்களுக்கு அறிமுகம்
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்க நவீன கார் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தற்போது ஆளும் தலிபான் அரசு , நியமிக்கப்பட்ட பொறியியல் குழுவினர் ஊடாக தங்கள் நாட்டினுடைய தயாரிப்பாக குறித்த காரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மடா 9 என குறித்த நவீன காருக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் உருவாக்கதில் 30 பொறியாளர்கள் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஆளும் தலிபான் அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் அப்துல் இந்த நவீன காரை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.