முஸ்லீம் ஆளுனர் ஒருவர் ஜோஹான்னஸ்பேர்க் நகரத்தை முதல் முதலாகக் கைப்பற்றியிருக்கிறார்.
தென்னாபிரிக்காவின் தலைநகரமான ஜோஹான்னஸ்பர்க் நகரத்தின் ஆளுனராகியிருக்கிறார் தபேலோ ஆமாத் என்ற இஸ்லாமியர் ஒருவர். ம்போ பலட்ஸே என்ற தென்னாபிரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியிடமிருந்து ஆமாத் ஜோஹான்னஸ்பர்க் நகரத்தைக் கைப்பற்றியிருக்கிறார். நீண்ட காலமாக தென்னாபிரிக்காவின் சகல பகுதிகளிலும் பரவியிருக்கும் ஊழல்களை ஒழித்துக்கட்டுவதே தனது முக்கிய பணி என்று குறிப்பிட்டிருக்கும் ஆமாத், ஏற்பட்டிருக்கும் மாற்றம் சரித்திரத்தில் முக்கியத்துவமானது என்று கூறித் தான் பணிவுடன் எல்லோருக்கும் நன்றி கூறுவதாகத் தெரிவித்தார்.
2021 இல் ஜோஹான்னஸ்பர்க் நகரின் ஆட்சியை இழந்துவிட்ட ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆமாத்துக்குத் தனது ஆதரவைக் கொடுத்ததன் மூலமே ஆமாத் அப்பதவியைக் கைப்பற்ற முடிந்தது. மாநகரின் 270 உறுப்பினர்களில் மூன்று பேரை மட்டுமே ஆமாத்தின் கட்சி கொண்டிருக்கிறது.
ஆமாத்திற்கு முன்னர் ஆளுனராக இருந்த தான் ஜோஹான்னஸ்பர்க் நகரின் முதலாவது கறுப்பினப் பெண் ஆளுனராக 2021 இல் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அவர் மீது சமீப மாதங்களில் அடுக்கடுக்காக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு மூன்றாவது வாக்கெடுப்பில் ஆமாத் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். அரசியல் பேரம் பேசல் மூலம் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மூன்றே இடங்களைக் கொண்ட ஆமாத்தின் கட்சியிலிருந்து ஆளுனரைத் தெரிந்தெடுக்க உதவியதாகக் குறிப்பிடப்படுகிறது.
தென்னாபிரிக்காவின் மக்களில் சுமார் 1.7 விகிதமானவர்கள் மட்டுமே முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்