ஞான கங்கை திவ்யமானது-எழுதுவது கவிஞர் கேலோமி..!
சந்திரன்
இருபத்தி ஏழு
நட்சத்திரங்கள்
நிலவில்
தமிழ்
ஔவை
பாட்டி
என்று
சோறுட்டி
வளர்த்த
தாய்மார்கள்
அம்புலியை
காட்டி
வளர்த்த
ஆசை.
சந்திரனை
மாமா
என்று
அழைத்த
உறவு.
கோள்களுக்குள்
உறவுகளை
உணர்த்திய
புராணங்கள்
இராமாயணம்
மகாபாரதம்
காட்டிய
சந்திர
சூரிய
வம்சங்கள்.
ஆஞ்சநேயர்
வாயில்
பிடித்த
சூரியன்
சிவபெருமான்
தலையில்
பிறை.
பௌர்ணமி
அமாவாசை
தருணங்களில்
இந்தியர்கள்
நடத்திய
வழிபாடுகள்
பிராத்தனைகள்.
காலையில்
சூரியனை
இரவில்
சந்திரனை
பிறை
பார்த்து
வழிபட்ட
நேசங்கள்.
நமது
மரபில்
நமது
உணர்வில்
செல்களில்
அதன்
திமில்களில்
தன்
ஜீவ
ஒளியை
தேஜஸ்
ஓஜஸ்
யவனம்
குறையாமல்
தூரத்தை
சமீபமாக்கியது.
எங்கள்
பழைய வைகள்
எங்கள்
மூதாதையர்களின்
திவ்விய
அஸ்திர
சஸ்திரங்கள்.
அது
எங்களுக்கு
பழக்கம்
வழக்கம்
ஆகி
போன
ஒன்று.
எங்கள்
ஞானகங்கை
திவ்வியமானது.
விஞ்ஞானத்தின்
ஒரு
சிறகை
அது
விரித்துள்ளது.
இனி
எல்லா
கோள்களிலும்
இறைவன்
இருப்பிடத்திற்கும்
எங்கள்
தேசம்
பயணிக்கும்.
எங்கள்
இருப்பிடம்
அதற்கு
எங்களை
தானே!
அழைத்து
செல்லும்.
இந்த
சாதனை
செய்த
இஸ்ரோ
வாழ்க
விண்ணில்
மண்ணில்.
வாழ்க
பாரதம்.
அதன்
புதல்வர்கள். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹