சுயஸ் கால்வாயினூடாக கப்பல் பயணத்திற்கு தடை…!
ஐரோப்பா ஆசியா இடையே செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாயான சுயஸ்கால்வாயினூடாக கப்பல் பயணம் மேற்கொள்ள தடைவிதிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையில்லாமல் வறட்சியான கால நிலை நிலவுவதால் சுயஸ்கால்வாயினுள் காணப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக அதில் பயணிக்க கூடிய கப்பல்கள் தரை தட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ் ஆபத்தினை தடுக்கும் நோக்குடன் ஒரு வருட காலத்திற்கு கப்பல் போக்குவரத்தினை தடை செய்ய நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பா,ஆசிய நாடுகளுக்கிடையே வர்த்தக தொடர்புகளை இலகுவாக மேம்படுத்திக்கொள்ள சுயஸ்கால்வாய் ஒரு தளமாக அமைகின்றமை குறிப்பிடதக்கது.
80 கிலோமீட்டர் நீளமுடைய இந்த கால்வாயினூடாக தினசரி பயணிக்க 90 படகுகள் வரிசையில் நிற்கும் ,தற்போது இந்நிலைமாறி 130 படகுகள் கால்வாய்க்கு வெளியே வரிசையில் நின்று செல்லும் நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடதக்கது.