தண்ணீரும் கண்ணீரும்..!
தண்ணீர்…(கண்ணீர்)
தவிச்ச வாய்க்கு தண்ணீரில்ல
தாளம் போடும் தவளைக்கும் கண்ணீரில்ல
குளமே வறண்டு போனதாம் குடிசைகளே நிறைந்து போனதாம்
மரமற்று மனிதங்களே முளைத்திருக்க வெப்பக்காற்று மனசுல சுழன்றடிக்க மின்விசிறியை சுழலவிட்டு கண்ணயர்ந்து போன மனிதம்
மறுகாலை விழித்த மனிதம் நீர்தேடி அலைஞ்சா நீராவியாய் மேகம் கடக்க காணல் நீராய் கண்ணில் நிலைக்க கண்ணீரிலும் உப்பில்லை அவனது உடலிலும் வலுவில்லை
காரணம் புரிஞ்ச மனிதம் நட்டுவைக்க எட்டடி வைக்க இயலாது இடர்கொண்டு இடராட இமைகளோ விழிநீர் அரும்ப முயற்ச்சித்தான் தண்ணீர் பெருக்க….கண்ணீரே பெருகியது. ஆக்கம், . இருளம்பட்டு,
ப. கல்யாணசுந்தரம்.