காஷ்மீரை யுத்த பூமியாக்கியது யார்..?
காஷ்மீர்
பனித்துளிகளும்
பனிக்கட்டிகளும்
காதலர்களுக்கு
தேனிலவும்
படகுவீடுகளும்
அழகு
ஏரிகளும்
சிலுசிலு
தென்றல்களும்
இன்ப
கனா
சுற்றுலாதலம்
என்ற
நினைவை
பாரதத்தில்
அகற்றியது
யார்?
உலகத்தின்
ஒட்டுமொத்த
இராணுவ
வீரர்களின்
ஆற்றலை
பெற்றது
போல்
அடிக்கு
ஒரு
ஜம்முகாஷ்மீர்
போலிஸ்காரர்களின்
கம்பீர
பாதுகாப்பு.
இத்தனை
சோதனை
சாவடிகளை
கடந்தும்
ஊடுருவும்
தீவிரவாதிகள்.
அதி தீவிர கண்காணிப்பில்
இந்திய
இராணுவம்.
பனி
உறைந்தாலும்
உறையாத
நெஞ்சுரம்
இராணுவ
வீரர்களின்
தந்துகிகளில்
தத்தி
ஓடும்
நாட்டு பற்று
பாரத
உணர்வு
குறையாத
இளம்
சூட்டு
இரத்தம்..
நம்மை
எதிரிகளிடமிருந்து
காக்க
யுத்த பூமியில்
அவர்கள்.
இங்கு
நம்மை
வேட்டையாட
இனம்
மொழி
சாதி
மதம்
மொழி
என்று
பிணந்தின்னி
அரசியல்
பேசும்
இனம்
மானம்
என்று
நாம கரணம்
சூட்டிக்கொள்ளும்
கோமாளிகள்.
அவர்களின்
சதுரங்க
வேட்டை
பணங்கள்.
சொத்து
குவிக்க
இயற்கையை
விற்று
வயிறு
வளர்க்கும்
ஈனபிறவிகள்.
அவர்களின்
அறிவாற்றலில்
பேச்சில்
நடிப்பில்
தன்னை
இழக்கும்
அடிமை
இளைஞர்கள்.
அப்பாவி
மக்கள்.
போதை
கடத்தல்
அறியாமையில்
பாதைமாறிய
சமுதாயங்கள்.
மதத்தை
தூண்டும்
சாதியை
தூண்டும்
பெண்களை
பலியிடும்
அசுர கூட்டம்.
இராணுவமே!
நீ
எதிர்ப்பது
வேற்று
நாட்டு
எதிரியை!
காப்பது
உள்நாட்டு
அரசியல்
கொள்ளையர்களை!
தயவு
செய்து
ஒரு
மணிநேரம்
களைகளை
பிடுங்கு.
நற்பயிர்
நன்றாக
விளைய
மண்ணின்
விண்ணின்
ஆசிர்வாதங்கள்.
ஏய்!
காஷ்மீரே!
அழகிய
வெள்ளை
பனிகட்டிகளை
மனிதர்கள்
ஏன்
இரத்தசிவப்பாய்
யுத்த
பூமியாய்
மாற்றினர்.
அரசியல்
மதங்கள்
மொழிகள்
அழிந்தாலும்
உன்
இயற்கை
தன்மையை
அழித்து விடாதே!
காஷ்மீர்
பூக்களும்
அதன்
குங்குமப்பூக்களும்
எங்கள்
பாரதத்தின்
வெகு மானம்.
எங்கள்
வளரும்
சிசுக்களின்
நிறத்தின்
உணர்வின்
செரிமானம்.
ஏ
பாரதமே!
அதன்
அரசியலே!
பணம்
சம்பாரித்தது
போதும்.
கொஞ்சம்
மனிதத்தை
அன்பை
ஆசீர்வாதத்தை
சம்பாரி.
உன்
மண்
உன்
காலம்
உன்
மக்கள்
உன்னை
தேர்ந்தெடுத்த
தெய்வங்கள்
அவர்களுக்கு
கடமை
ஆற்ற
வா!
உன்
குடும்பத்துக்கு
பொதி
சுமந்தது
போதும்.
அங்கு
பிணந்தின்னி
கழுதைகள்
உன்
வாரிசுகளாக
வளர
ஏன்
அதிகம்
சாகின்றாய்?
காஷ்மீர்
அமைதி
சாந்தி
அழகு
அகிம்சை
ஆனந்தம்
நிறைய
காக்க
வேண்டிய
அரிய
இயற்கை
பொக்கிஷம்.
சாதுக்கள்
மிரண்டால்
காடு
மட்டுமல்ல
நாடும்
தாங்காது.
கேலோமி🌹🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985