அவுஸ்திரேலிய பாகிஸ்தான் அணிகள் முதலாவது டெஸ்டில் இன்று…!

பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதன் போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் விளையாட இருக்கிறது.

இதில் முதல் போட்டி இன்று காலை 7.50 க்கு உலகின் அதி வேக ஆடுகளமான பெர்த்தில் இடம்பெருகிறது.

உலக கிண்ண வெற்றியோடு அவுஸ்திரேலிய அணி உள்ளூர் ரசிகர்களுடன் இப்போட்டியில் களமிறங்குகிறது.

இதே வேளை புதிய டெஸ்ட் தலைவரான ஷான் மசூத் தின் தலைமையில் விளையாடுகிறது.

14 வது முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை எந்த ஒரு தொடரையும் அவுஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றவில்லை.

இதே வேளை அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் சாதனை படைக்க காத்திருக்கிறார்.இன்னும் 04 விக்கட்டுக்களை வீழ்த்தினால் 500 விக்கட்டுக்களை எட்டிய 03 வது அவுஸ்திரேபந்து வீச்சாளர் என்ற பெருமையை பெருவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *