குவைட் மன்னர் காலமானார்..!

குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல் அஹமத் அல் சபா உடல்நலக்குறைவால் தனது 86 வது வயதில் காலமானார் என்று குவைட் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குவைட் அரசு மன்னா ஷேக் நவாப் அல் அஹமத் அல் சபா காலமானார் என்றும்,இவரின் மறைவிற்கு மிகுந்த சோகத்துடனும் ,துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு தனது சகோதரனின் மறைவிற்கு பின்னர் பொறுப்பேற்ற இவர் மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார்.

கடந்த மாதம் உடல் நலபிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *