தமிழ் சினிமா பிரபல நடிகர் விஜயகாந் காலமானார்..!

தமிழகத்தின் தே.மு.திக கட்சி தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார்.

எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் ஏற்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேமுதிக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *