கூகுளை பார்த்து செயற்பட்டதனால் இந்த நிலமை..!

கூகுள் வரைப்படத்தினை பார்த்து தான பலரும் பல இடங்களுக்கு செல்கின்றனர். சில சமயம் இந்த கூகுள் வரைப்படம் காலை வாரி விட்டுவிடும் .அவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கூகுள் வரைபடத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, கொழும்பு அலரிமாளிகை வளாகத்திற்குள் தவறுதலாக அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

இவர்கள் கடந்த சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மென் பொறியியலாளர் மற்றும் கடலோடி ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிக்கு சென்று மது அருந்தியதாகவும் முஹந்திரம் வீதியில் உள்ள,

தங்குமிடத்திற்கு திரும்ப முயற்சித்ததாகவும் கூகுள் வரைபடத்தை நம்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், வழிகாட்டுதல்கள் அவர்களை அலரி மாளிகையின் சுற்றுச்சுவருக்கு அருகில் ஒரு முட்டுச்சந்திற்கு செல்ல வழிகாட்டியுள்ளது.

தங்கள் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், அவர்கள் சுவரைக் கடந்து அலட்சியமாக அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்தனர்.

இதன்போது, ​​பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *