ஜோ பைடன் பெருங்குடல் பரிசோதனைக்காக மயக்க நிலைக்கு உள்ளாக்கப்படவேண்டிய நிலையில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி.
வெள்ளியன்று தனது மருத்துவ பரிசோதனைக்காக மயக்க நிலைக்கு உள்ளாக்கப்படவிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். அந்தச் சமயத்தில் அவர் தனது ஜனாதிபதி அதிகாரங்களை உப ஜனாதிபதியான கமலா ஹாரிஸிடம் ஒப்படைப்பார் என்று வெள்ளை மாளிகைக் காரியதரிசி வெளிப்படுத்தியிருக்கிறார்.
2002 இலும் 2007 இலும் ஜோர்ஜ் புஷ் இதே பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது அவர் மருத்துவ மயக்கமாக்கப்பட்டார். ஆனால், டொனால்ட் டிரம்ப் அதே பரிசீலனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது தன்னை மயக்க நிலைக்கு உட்படுத்தச் சம்மதிக்கவில்லை. அவர் தனது உப ஜனாதிபதியாக இருந்த மைக் பென்ஸிடம் சிறிது நேரமும் தனது அதிகாரங்களைக் கையளிக்க விரும்பாத காரணத்தினாலேயே அப்படிச் செய்தார் என்று சமீபத்தில் டிரம்ப்பின் பத்திரிகையாளர் தொடர்பாளர் எழுதிய புத்தகத்திலிருந்து வெளியாகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்