கண்ணீர்த் துளிகளின் கடிதம்!

மகனே!
என்னைக் கொஞ்சம்
பேச விடு!
நரம்புகள் செத்து
கிடக்கும் வயதில்
நான் நடந்து
போவதற்கு விடு!

பல கோடி
வலிகள் இருந்தாலும்,
உன் விழிகளுக்கு
தெரியாது மறைத்துப்
போன நாட்களை
மீட்டிப் பயணித்தவாறு
நடக்கிறேன். என்னை
நடந்து செல்ல
விடு!

உனக்கு கஷ்டங்கள்
தெரியாது! காடையர்கள்
நடுவில் காய்ந்து
போய் உன்
ஆசையை நிறை
வேற்றினேன். என்
ஆசை ஒன்றையும்
நிறைவேற்றி விடு
மகனே!

கவலை கொள்ளாதே!
என்னை சுவர்கள்
நடுவில் சுவாரசியம்
பேச வைத்து
விடாதே! உனக்கு
வைத்தியம் பார்க்க
பணம் இல்லாது
போய் விடும்!

நான் போகும்
பாதையில் முட்கள்
நிறைந்து கிடக்கலாம்.
அதற்காக என்
மீது இரக்கம்
கொள்ளாதே! நான்
கொண்ட பாசத்திற்கு
நீ தந்த
பரிசே போதும் எனக்கு!

என் வயது
என்னுடலுக்கு ஒத்துழைப்பு
வழங்கவில்லை, வியாதிகளும்
அதிகம், உன்
நேரங்களும் குறைவு.
என்னை நீ
சேர்த்துப் போன
இல்லம் என்னைப்
பார்த்து கூறுகின்றது
இன்று!

இறைவன் தந்த
அற்ப வாழ்வில்.
ஔியாய் கிடைந்த
உன் அம்மாவுக்கு
சொல்லி விடாதே!
அவளின் உயிர்
அவ்விடம் பிரிந்திடக்
கூடும்!

மகனே! என்
பேச்சுக்கள் ஓயும்
நேரம் வந்துவிட்டது,
இதயம் மொதுவாக
துடிக்கின்றது,
விரல்கள் விரைத்துப்
போய் உள்ளது,
நான் மரணிக்கும்
காலம் வந்துவிட்டது பயப்படாதே!
என் மரண
ஊர்வலம் கூட
உனக்கு தெரியாது
நடந்து போய் விடும்!

நீயும் பார்த்து நட!
இந்த நாகரிக
மோகம் உன் பிள்ளைக்கு
வராது வளர்த்து விடு
நான் பட்ட
வலிகள் போதுமானது!

மகனே! உன்னைப் பற்றி
உறவுகள் தவறாகப் பேசி
இருந்தால். மனதளவு
வைத்து விடாதே!
மறந்து வாழ பழகிக் கொள். என்
வலிகளை விடக் கொடூரமான
வலிகள் வரக் கூடலாம்
உறவுகளின் பேச்சால்!

எழுதுவது : பொத்துவில் அஜ்மல்கான்