எனக்காக பிறந்தவளே என் தங்கையே

எனக்காக பிறந்தவளே என் தங்கையே

நம் வீட்டில் என்னுடன் விளையாட எனக்காக பிறந்தவளே நீ தான் என் தங்கையே

என்றும் என் வாழ்வில் என் துணையாக என் தோழியாக வாழ்கிறாய்

உன் பேச்சால் அம்மாவை அதட்டியும் அப்பாவை அடங்கிப் போகவும் செய்கிறாய் என் தங்கையே

நம் வீட்டில் உனக்கு அடங்காத ஒரு நபர் உண்டோ ஆனால் உன் முகத்தில் சிரிப்பை தவிர வேறு சோகம் வந்தால் எங்களால் ஏனோ தாங்கிக்கொள்ள முடியவில்லை

என் உயிரில் பாதியல்ல என் உடலின் வடிவமல்ல என் உறவின் உலகமே நீ

நீங்காத அன்பும் நான் உன் மீது கொண்ட பாசமும் நம் பெற்றோர் நம் மீது கொண்ட நேசமும் நீங்காமல் நீ பல்லாயிரமாண்டு எங்களோடு வாளவேண்டும் என் தங்கையே

இப்படிக்கு
வ.ஜுவஸ்ரீ
இளங்கலை தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கரூர் 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *