ஏது காதல் ? எது காதல் ?
கனவறைக் குள்ளே கணவரைத் தேடும்கலவரம் தானோ காதல்மனவறைக் குள்ளே மணவறை காணும்மதுரச மாமோ காதல்தினசரி போலே தினம்விழி பார்க்கத்தேடிடுவ தாமோ காதல்இனசனம் கூட்டி இல்லற வாழ்வில்இணைத்திடும் தேனோ காதல்*
இருவரு மொன்றி இருதயம் சேர்க்கும்இலக்கிய மாமோ காதல்ஒருவரு மறியா உறவது காணும்ஒருவரம் தானோ காதல்திருமண மென்னும் திருவிழா காணும்தெய்வமோ இந்த காதல்கருவினை சுமக்க கணவரைச் சேரும்கவிதையைப் போலோ காதல்*
இல்லற வண்டி இயங்கிட வுள்ளஎரிபொரு ளாமோ காதல்அல்லலில் சிக்கி அவதிகள் கொள்ளும்ஆபத் தாமோ காதல்மெல்லவும் முடியா விழுங்கவும் முடியாமீன்முள் போலோ காதல்சொல்லவே முடியா சோதனை யானசோகமோ இந்தக் காதல்*
*கள்வனைப் போலே கனவினில் வந்துகதையளப் பதாமோ காதல்முள்ளுக் கொடியில் முகையை அவிழ்க்கும்மோகப் பூவோ காதல்பிள்ளைகள் நாலு பெற்றதன் பின்னேபிறைபோல் தேய்வதோ காதல்உள்ளநாள் வரைக்கும் உயிருடன் உயிரைஉயிராய் கொள்வதோ காதல்?
எழுதுவது: கரவையூர் தயா.