எதிர்பார்த்தபட ஷெபாஸ் ஷரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சனிக்கிழமை நடுநிசிக்குப் பின்னர் கூடிய பாகிஸ்தான் பாராளுமன்றக் கூட்டத்தில் இம்ரான் கான் தனக்கு ஆதரவாகப் பெரும்பான்மை அங்கத்துவர்கள் இருப்பதாக நிரூபிக்க முடியாததால் பதவியிழந்தார். அதையடுத்து திங்களன்று பிற்பகல் கூடிய சபையில் புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் [நவாப் ஷெரிப் பகுதியினர்] கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷரீப் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார்.

சபாநாயகர் கலைத்த பாகிஸ்தான் பாராளுமன்றத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு அழைத்தது உச்ச நீதிமன்றம். – வெற்றிநடை (vetrinadai.com)

இம்ரான் கான் அரசில் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஷா மஹ்மூத் குரேஷி பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று வாக்கெடுப்புக்குக் குறுகிய நேரம் முதல் வரை தஹ்ரீக் ஏ இன்சாப் கட்சியினர் அறிவித்திருந்தார்கள். ஆனால், “திருடர்களுடனும், வெளிநாடுகளின் கைக்கூலிகளுடனும் நாம் பாராளுமன்றத்தில் இருக்க முடியாது,” என்று குறிப்பிட்டு அக்கட்சியினர் வெளிநடப்புச் செய்தார்கள்.

ஷெபாஸ் ஷரீப் மற்றும் அவரது மகன்மார் இருவர் மீதும் கறுப்புப் பணம் கையாண்டதாக வழக்கு நீதிமன்றத்திலிருக்கிறது. அவ்வழக்கிலிருந்து ஷரீப்பை நீதிமன்றம் இன்று ஒதுக்கிவைக்கப்பட்டு ஏப்ரல் 27 ம் திகதி வரை அவருடைய எதிர்பார்ப்புப் பிணையை ஒத்திவைத்தது. 

70 வயதான ஷரீப் மூன்று தடவைகள் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷரீப்பின் சகோதரராகும். தனக்கெதிராகப் பல பணக் கையாடல், ஊழல்கள் வழக்குகளைக் கொண்டவர் நவாஸ் ஷரிப். அவ்வழக்குகள் பலவற்றிலும் அவருக்கெதிராகச் சிறைத்தண்டனைகளையும் கொண்டவர். அவரது அரசு நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் கலைக்கப்பட்டது. 

2019 இல் லாகூர் நீதிமன்ற நவாஸ் ஷரீப்பை மருத்துவத்துக்காக லண்டனுக்குச் செல்ல அனுமதித்தது. அங்கேயே தொடர்ந்தும் வாழ்ந்து வரும் அவர் வரவிருக்கும் ஈத் பெருநாளின் பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்புவார் என்று இன்று அறிவிக்கப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *