விண்வெளியிலிருந்து 183 நாட்களின் பின் திரும்பிய மூன்று சீன தாய்க்கொனாட்டுகள்.
விண்வெளியில் இருக்கும் சியாங்கொங் ஆராய்ச்சி நிலையத்தில் சுமார் ஆறு மாதங்களைக் கழித்த பின்னர் சனிக்கிழமையன்று மூன்று சீன தாய்க்கொனாட்டுகள் பூமிக்குத் திரும்பியிருப்பதாகச் சீனா தெரிவித்தது. அவர்களில் இருவர் ஆண்கள், ஒருவர் பெண் ஆகும். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் புறக்கணிக்கப்பட்ட சீனர்கள் சுமார் பத்து வருட காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் கணிசமாக முன்னேறி வருகிறார்கள்.
2029 இல் சந்திரனுக்குத் தமது விண்வெளி வீரர்களை அனுப்புவதற்குத் திட்டமிட்டிருக்கும் சீனா 2030 இல் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இணையாக விண்வெளி ஆராய்ய்ச்சியில் முன்னணியில் இருக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்திருக்கிறது. செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலத்தின் மூலம் வாகனமொன்றை அனுப்பி அந்த நிலப்பரப்பிலிருந்து மண், கல் போன்றவைகளைக் கொண்டுவந்திருக்கிறது.
வந்திறங்கிய விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவரும் வானத்தில் நடப்பதைச் செய்திருக்கிறார்கள். வேறு பல ஆராய்ச்சிகளையும் விண்வெளிக்கலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். பூமியைச் சுற்றி விண்வெளியில் பயணித்துக்கொண்டிருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு மீண்டும் பயணிகளை வரும் மாதங்களில் சீனா அனுப்பும். அவர்களும் ஆறு மாதங்களுக்கு விண்வெளியில் தங்கியிருப்பார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்