எலோன் மஸ்க்கின் மகன்/ள் தன்னைப் பெண்ணாக அங்கீகரிக்க வேண்டி விண்ணப்பம்.
உலகப் பெரும் தனவந்தரும் டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலோன் மஸ்கின் மகன் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் கடந்த ஏப்ரலில் 18 வயதை எய்தினார். அதையடுத்து அவர் அதையடுத்த மாதத்தில் தன்னைப் பெண்ணாக விவியன் ஜென்னா வில்சன் என்ற பெயருடன் தாயுடைய பெயரைக் குடும்பப் பெயராகக் கொள்ள வேண்டி கலிபோர்னியா மாநில அதிகாரத்திடம் விண்ணப்பித்திருக்கிறார்.
“என்னைப் பால் மாற்றம் செய்துகொள்வதுடன் எந்த விதத்திலும் எனது தந்தையின் அடையாளத்தைக் கொள்ளவும் விரும்புகிறேன்,” என்று தனது விண்ணப்பத்துக்காக விவியன் ஜென்னா வில்சன் காரணம் தெரிவித்திருப்பதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.
விவியன் ஜென்னாவின் தாய் ஜஸ்டீன் வில்சன் எலோன் மஸ்க்கைத் திருமணம் செய்திருந்தார். மஸ்க், வில்சன் தம்பதிகளுக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். In vitro fertilisation மூலம் அவர்கள் பிறந்தார்கள். அவர்களிருவரும் 2008 இல் விவாகரத்துச் செய்துகொண்டனர்.
கிளாரா எலிஸ் பௌச்சர் என்ற Grimes குழுப் பாடகியுடன் எலோன் மஸ்க் மேலும் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகும்.
விவியன் ஜென்னா தனது பால்மாற்றத்துக்கான விண்ணப்பம் செய்துகொண்ட அடுத்த மாதத்தில் எலோன் மஸ்க் ரிபப்ளிகன் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியினர் அமெரிக்காவில் பால்மாற்றம் செய்துகொண்டவர்களின் உரிமைகளை மட்டுப்படுத்துவதற்காகப் போராடி வருகிறது.
2020 இல் எலோன் மஸ்க், “பால்மாற்றம் செய்துகொள்கிறவர்களைப் பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அவர்கள் எப்படியெப்படியெல்லாம் தம்மை மற்றவர்கள் அழைக்கவேண்டும் என்று குறிப்பிடும் விபரங்களைப் பார்க்கும்போது தலை சுற்றுகிறது,” என்று குறிப்பிட்டிருந்தார். அப்படியான அவருடைய கருத்துக்களுக்குப் பலரும், பல மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
சாள்ஸ் ஜெ. போமன்