பிரித்தானிய பிரதமராகிறார் ரிஷி சுனக்
பிரித்தானாயிவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பிரதமரான லிஸ் ட்ரஸ் பதவி விலகலைத் தொடர்ந்து, கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கு வர குறைந்தளவு 100 எம்பிகளின் ஆதரவை காட்டவேண்டியதன் அடிப்படையில் , ரிஷி சுனக் மட்டுமே அதை நிறைவேற்றி பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 190 க்கும் மேற்பட்ட எம்பிக்களின் வெளிப்படையான ஆதரவுடன் பிரித்தானியப்பிரதமராகிறார் ரிஷி சுனக்.
கட்சித்தலைமைக்கான போட்டியாளராக இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட பென்னி மோர்டண்ட், நிறைவுவரை அவரால் 100 எம்பிக்கள் ஆதரவை உறுதி செய்யமுடியாத நிலையில் போட்டியிலிருந்து வெளியேறினார்.
கொனசவேர்டிவ் தலைமைப் போட்டியில் பதவியிலிருந்து விலகிய ட்ரஸ்ஸிடம் தோற்று ஏழு வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் ரிஷி சுனக் இதில் வெற்றி பெற்றுள்ளார் தன் பிரதமராகும் வாய்ப்பை நிலைநிறுத்தியுள்ளார்.
மேலும் இங்கிலாந்து எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார சவால்கள் மத்தியில் பதவியேற்கவுள்ளார்.
அது மட்டுமல்லாமல் பிரித்தானியாவின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
அத்துடன் ரிஷி சுனக் பிரித்தானியாவில் பதவியேற்ற மிக இளவயதான பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது