நெதர்லாந்தை வென்றது பங்களாதேஷ் |T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண குழு 2 இன் இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணியை பங்களாதேஷ் அணி வெற்றிகொண்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப்பெற்றது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

அந்தவகையில் பங்களாதேஷ் அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வெற்றிகொண்டு முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியில் 25 ஓட்டங்களைக் கொடுத்து 4விக்கெட்டுக்களை கைப்பற்றிய ரஸ்கின் அஹ்கமட் அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *