பங்களாதேஷின் இரண்டாவது வெற்றி|T20 உலகக்கிண்ணம்
T20 உலகக்கிண்ண இன்றைய குழு நிலைப் போட்டியில் பங்களாதேஷ் அணி சிம்பாவே அணியை மூன்று ஓட்டங்களால் வென்று தன் இரண்டாவது வெற்றியைப்பதிவு செய்துள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப்பெற்றது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி, விறுவிறுப்பாக நிறைவுவரை விளையாடி 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பங்களாதேஷ் அணியின் சார்பில் நஜ்முல் குசைன் 55பந்துகளில் 71 ஓட்டங்களையும் சிம்பாவே அணியின் சார்பில் ஷோன் வில்லியம்ஸ் 42 பந்துகளில் 64 ஓட்டங்களை குவித்தது ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கை ஆகும்
பங்களாதேஷ் அணியின் சார்பில் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக்கைப்பற்றிய ரஸ்கின் அஹ்மட் போட்டியின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.