ஓரினச்சேர்க்கை திருமணம் அனுமதிக்கப்படலாமா என்று இந்திய உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கவிருக்கிறது.
தெலுங்கானாவைச் சேர்ந்த அபய் டங்கே, சுப்ரியோ சக்ரபோர்த்தி ஆகியோர் தம்மிருவரும் செய்திருக்கும் திருமணத்தை ஆணும், பெண்ணும் செய்துகொள்ளும் திருமணம் போன்று சமூகம் அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கேட்டு நீதிமன்றம் கடிதம் அனுப்பியிருக்கிறது.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்திய உச்ச நீதிமன்ற பிரிட்டிஷ் காலனித்துவத்தின் சட்டமாக இருந்த ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரியது என்பதை நீக்கித் தீர்ப்பளித்திருந்தது. அதன் பின்னர் வயதுக்கு வந்த இரண்டு பேர் ஓரினச்சேர்க்கையில் மனச் சம்மதத்துடன் ஈடுபடுதல் இந்தியாவில் குற்றமல்ல.
இந்தியாவின் தற்போதைய நரேந்திர மோடி அரசு ஓரினச்சேர்க்கைத் திருமணங்களுக்கு எதிரான கோட்பாடுள்ளது. ஒரு வருடத்துக்கு முன்னர் டெல்லியின் இந்திய உயர் நீதிமன்றத்தில் இதேபோன்ற கோரிக்கையொன்று வந்தது. அதை இந்திய அரசிடம் அனுப்பப்பட்டபோது, “இந்தியாவிலிருக்கும் தனியார் உறவுகள் பற்றிய சட்டங்களுக்கு அது குழப்பகரமானதாக அமையும்,” என்று கூறி மறுக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்