இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல கூடுகிறது|மக்களை கவனமெடுக்க கோரிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் இதுவரை 781 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக 9195 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடும் அந்த அறிக்கையில்,302 பேருக்கு மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் திரிபடைந்த கோவிட்டின் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்துள்ள சூழலில் இந்தியாவில் மேலும் பரவாமல் இருக்க மக்கள் அதிகூடிய கவனம் எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பும் ஒமிக்ரோன் தொடர்பில் எச்சரித்துள்ள நிலையில் டெல்ற்றா திரிவினால் இந்திய நாடு மிக கொடிய காலத்தை தாண்டி வந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.