இளவயது விமானியாக உலகம் சுற்றும் ஸாரா| இப்போது தென்னாசியாவில் நிற்கிறார்

இலகுரக விமானத்தில் உலகம் சுற்றும் இளம் விமானி ஸாரா ருத்தெஃபோர்ட் (Zara Rutherford) இந்தோனேசியாவிலிருந்து புறப்படடு தென்னாசியாவை வந்தடைந்தார். அந்தவகையில் சிறிலங்காவின் இரத்மலானை விமான நிலையத்தில் நேற்று விமானத்தை தரையிறக்கினார். தொடர்ந்து இன்றையநாள் ஓய்வைத்தொடர்ந்து நாளை இந்தியாவின் கொயம்புத்தூர் நோக்கிப் புறப்படவுள்ளார் என அவரின் பயணத்திட்ட நேரசூசி தெரிவிக்கின்றது.

அண்ணளவாக ஐந்து கண்டங்களும் ஐம்பது நாடுகளினூடாக பயணம் செய்யத்திட்டமிட்டுள்ள ஸாரா, ஏற்கனவே சாதனையை பதிவு செய்ய 30வயதுடைய ஐக்கிய அமெரிக்காவின் ஷெஷ்டாவின் சாதனையை முறியடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

17 வயதிலேயே விமானம் ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தைப்பெற்ற ஸாரா இந்த சாதனைப்பயணத்துக்கான பயணத்தை பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி ஆரம்பித்திருந்தார். பூமத்திய கோடுவழியான இவரின் பயணம் இன்னம் அண்ணளவாக 3 மாதங்கள் தொடரும். இலகுரக விமானம் எனினும் சாதனைப்பயணத்துக்கு ஏற்றதாக அதன் இயந்திர அளவு, உயர் செயற்றிறன் உள்ளதாக உருவாக்கி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இவரின் பயணம் இந்தியா,டுபாய்,சவூதி அரேபியா,எகிப்து,கிரீஸ்,பல்கேரியா,ஸ்லோவோக்கியா,செக்குடியரசு,ஜேர்மனி,பிரான்ஸ் ஊடாக பெல்ஜியம் நாட்டில் நிறைவேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்ப பின்னணியிலேயே விமானம் சார்ந்த துறை தேர்ந்த இவர் அவரின் 14வயதில் விமானியாக அனுபவத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.