தமது துணையின் வன்முறைக்குள்ளாகும் தமிழ்நாட்டுப் பெண்கள் 38 % ஆகும்.

இந்தியாவின் தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு நடத்திய ஆராய்வின்படி தென்னிந்தியாவில், தெலுங்கானாவில் மட்டுமே, தமது துணையின் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் தமிழ்நாட்டை விடக் குறைவாகும். கர்நாட்காவில் 44.4% பெண்களும், தமிழ் நாட்டில் 38.1 % பெண்களும் தாம் தமது கணவர்களின் வன்முறைக்குள்ளாவதாகக் குறிப்பிடுகிறார்கள்.

தமிழ் நாட்டின் 27,929 குடும்பங்களில் 25,650 பெண்களிடமும்,  3,372 ஆண்களிடமும் இந்த ஆராய்வுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. 18 – 49 வயதினரிடையே இந்தக் கேள்விச்செவ்விகள் நடத்தப்பட்டன. 2015 – 2016 இல் தமது கணவர்களின் [உடல், பாலியல்] வன்முறைக்குள்ளாகிய தமிழ்நாட்டுப் பெண்கள் 40.7 விகிதமாகும். 

தெலுங்கானாவில் 36.9 % பெண்களும், ஆந்திராவில் 30 % பெண்களும், கேரளாவில் 9 % பெண்களும் தாம் கணவர்களின் [உடல், பாலியல்] வன்முறைகளுக்கு உள்ளாவதாகத் தெரிவித்தார்கள். 

டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 காலத்தில் மேற்கண்ட கேள்விச்செவ்விகள் நடாத்தப்பட்டன.

சாள்ஸ் ஜெ. போமன்