‘திமிங்கிலத்தின் அம்பருடன்’ இருவர் கைது..!
என்ன பொருளை விற்பனைக்கு தடையோ அல்லது வைத்திருக்க தடையோ அந்த பொருட்களை வைத்திருப்பது தான் இன்றைய சமூகம்.
இப்படி தடைவிதிக்கபட்ட பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மிரிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் மிகவும் பெருமதியான அம்பர் என தெரிவிக்கப்படும் திமிங்கிலத்தின் வாந்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை தெவிநுவர பிரதேசத்தில் வைத்து 08 கிலோ அம்பருடன் சந்தேகநபர்கள் குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமிங்கிலத்தில் இருந்து பெறப்படும் வாந்தியை மூலப்பொருளாக கொண்டு உலகின் மிக விலை கூடிய வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.
கைது செய்யப்பட்ட இருவரையும் மாத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் திமிங்கிலத்தின் அம்பரை வைத்திருத்தல், விற்பனை செய்தல் என்பன தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.