‘எக்ஸ்’ ல் வீடியோ ஓடியோ அழைப்புகள் அறிமுகம்..!
எதிர் காலத்தில் வீடியோ ஓடியோ அழைப்புகள் எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.உலக பணக்காரரான எலன் மஸ்க் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுனத்தை வாங்கியிருந்தார்.மற்றும் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டுவந்திருந்தார்.அண்மையில் டுவிட்டரின் லோகோ வினையும்,பெயரினையும் மாற்றி இருந்தார்.
இதேவேளை வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென புளு டிக் வசதி பெற கட்டணத்தை செலுத்தும் வசதியையும் அறிமுகமும் செய்திருந்தார்.
தற்போது வீடியோ,ஓடியோ அழைப்புகள் எக்ஸ் தளத்தில் ஏற்படுத்தப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.மற்றும் இதற்கு தொலைப்பேசி எண் தேவையில்லை என்றும் இது தனித்துவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த வசதிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.