மழையே வாராயோ …!
. மழையே வாராயோ மழையே வாராயோ முனகிடும் உயிர்கள்! உயிரைக் காக்கவே வானகம் இடிந்திட இடியுடன் தண்ணீர் இயல்பாய் பொழிக! பொழிந்து நனைத்து பூமியில் குளிருடன் குளிர்ந்து மகிழும் குடிகள் காண்பாய்! காண்கிற பொழுதில் களிப்புறு மாந்தரும் மாந்தரின் வாழ்வே நீயென்று அறிவர்! அறிவைத் தந்திட மழையே வாராயோ!
ஹேமா ஹைதராபாத்