கிரிக்கெட் தரவரிசைகளில் முதன்மை பெற்று இந்தியா சாதனை..!
அவுஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேறகொண்டுள்ளது.
அங்கு 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும்,5 T-20 போட்டிகளிலும் பங்கு பற்றிவருகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் இன்று முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இரு அணிகளும் பலபரீட்சை நடத்தின.இதன் போது முதலில் துடுப்பெடுத்தாடிய அவுத்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 5விக்கட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கையடைந்தது.
இந்நிலையில் அவுத்திரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையை ICC வெளியிட்டுள்ளது.
இதன் படி 116 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்திலும் 115 புள்ளிகளைப்பெற்று பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை ICC டெஸ்ட் தரவரிசையில் 118 புள்ளிகளை பெற்றும்,T20 தரவரிசையில் 264 புள்ளிகளுடனும் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை ICCகிரிக்கெட் தரவரிசைகள் அனைத்திலும் இந்திய அணி சாதனைப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தான் ஆசிய கிண்ணத்தையும இந்திய அணி சுவீகரத்திருந்தது.இந்நிலையில் தான் இந்த சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.