உன்னால் நான் இப்படி ஆக்கப்பட்டேன்..!
பாலைவனம் ❗
பாவி என் நெஞ்சம்
வெறிச்சோடிக் கிடக்கிறது
வெடி குண்டு களால்
பொடியாக்கப்பட்ட
பாலஸ்தீன குடியிருப்பை போல்
பேய்களாகவும்
பிணந்தின்னிக் கழுகுகளாகவும்
ஏவி விடப்பட்ட
ஏவுகணைகளாக
உலா வரும் உன் நினைவுகள்
நித்தம் என்னை
நிலைகுலையச் செய்கிறது
அத்து மீறி
ஆக்கிரமித்துக் கொள்ளும்
இஸ்ரேலிய படைகளைப் போல்
அழகு என்னும் ஆணவத்தால் ஆக்கிரமித்துக் கொண்டாய்
ஐ நா எனும்
உறவு களை
அணுகிய போதும்
நீதி கிடைக்கவில்லை ❗
அன்பே ❗
அங்கே
ஏவுகணை வெப்பத்தில்
வெந்து கிடக்கிடக்கும்
தேகம்போல்
இங்கே
உன் மௌனத்தின்
உஸ்னத்தில் வெந்து
வெடிக்கிறது என் உள்ளம். ❗
வாழவும் முடியாமல்ல
மாழவும் முடியாமல்
முடக்கப் பட்டிருக்கும்
காசா வின் மக்களைப் போல்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
உன்னால் நானின்று
உறவுக்குள் அகத்தியாய்….
ஆயிரம் உறவுகள்
அருகிருந்தும்
அரபு தேசங்கள் போல்
அமைதியாய் கை கட்டி
வாய் பொத்தி
வேடிக்கை பார்க்கிறனர்
வேதனையை ❗
மழை துளிக்காய்
வானம் பார்த்து
ஏங்கி கிடக்கும்
பாலைநிலம் போல்
பாவி என்
வாழ்வும் எதிர் காலமும்
வறண்டு கிடக்கிறது
உன் வார்த்தை மழைக்காக……. ❗
அ. அ. நவாஸ்…✍️✍️