தப்பி சென்ற 102 கைதிகள் கைது..!
வெளிகந்த ,கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுருந்து தப்பி சென்ற 102 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் நேற்றைய தினம் தப்பியோடியுள்ளனர்.பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு குறிப்பிட்ட கைதிகள் ஓடியுள்ளனர்.
புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் .எனவே சிறைச்சாலையில் அடைக்குமாறு கோரியே தாம் வெளியேறியதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சமபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
