அடுத்த ஆண்டு நீர் கட்டணம் எப்படி வரப்போகிறது..!
2024 ஜனவரி முதல் நீர்கட்டணம் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
VAT வரி அதிகரிப்பிற்கு ஏற்ப குறித்த நீர்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய 3%நீர் கட்டணம்அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை உயர்வு ,மின்சாரக்கட்டண உயர் என்பவற்றால் மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது நீர் கட்டணமும் அதிகரிக்க இருக்கின்றமை மக்களை மேலும் கஷ்டத்திற்குள் தள்ளும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.