நரகமாகும் நகரங்கள்..!
நரகமாகும் நகரங்கள்
நரகம் என்று
சொல்லும் வேளையிலே /
உயர்ந்து நிற்கிறது
வளர்ச்சியில் ஊர்கள் /
கூட்டம் அதிகமாய்
வாட்டமாய் எங்கும் /
ஒரிடத்தில் பெருக்கம்
ஆகியது நெருக்கம் /
குப்பைகளின் தேக்கம்
கோபுரமாய் நிறைய/
கூடிடும் மாசு
தந்தது பிணியை /
இயற்கையை மாற்றிய
மனிதனும் தீயவனே /
தீயில் வேகும்
காலம் தினமுமிங்கு /
கடற்கரையில் தொடங்கி
கடைவரை சீர்கேடு /
பாதாள அறை
தாண்டியச் சாக்கடை /
இடைவெளி குறைந்து
இறுகிய வாழ்விடம் /
இப்போதே இவ்விடம்
மாறிவிட்டதே அவனியிலே /
ஹேமா ஹைதராபாத்