ஆந்திராவில் அடையாளம் தெரியாத வியாதி பரவிவருகிறது
இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் இலூரு என்ற நகரில் சுமார் 400 பேர் இன்னதென்று தெரியாத வியாதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகக்குறைந்தது அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்று தெரியவருகிறது.
ஞாயிறன்று தலைச்சுற்று, மயக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட அவர்களின் வியாதி கொவிட் 19 மட்டுமன்றி, டெங்கு, மலேரியா போன்ற அறியப்பட்ட வியாதிகள் எவையுமே அல்ல என்று மருத்துவர்கள் உறுதியாகக் கூறிவருகிறார்கள்.
அவர்களின் இரத்தம், உமிழ் நீர் போன்றவைகள் சேர்க்கப்பட்டு ஆராய்ச்சிக்காகப் பல விஞ்ஞானகூடங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்திய மருத்துவ விற்பன்னர்களும் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பும் தமது மருத்துவர்களையும் இதுபற்றி அறிய அனுப்பிவைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது
சாள்ஸ் ஜெ. போமன்