செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம்.
செவ்வாய்க் கிரகத்தில் எப்படியான வகையில் உயிரணுக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அடையாளம் கண்டு கொண்டதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.
நிகழ்காலத்தில் செவ்வாய்க் கிரகம் எந்தவித உயிரினங்களும் வாழக்கூடியதாக ஆராய்ச்சிகளால் நிரூபிக்கமுடிவதில்லை. காரணம் அந்த நிலப்பரப்பில் நிலவும் கடுங்குளிரும், நீர்ப்பரப்பே இல்லாமையுமாகும். எங்காவது நீர் இருக்குமானால் அது உறைந்த நிலையில் கண்ணுக்கெட்டாத இடத்தில் மட்டுமே இருக்கலாமென்று தெரிகிறது.
சூரியனிலிருந்து பூமிக்கு இருக்கும் தூரத்தைவிட 1.5 மடங்கு அதிக தூரத்திலிருக்கும் செவ்வாய்க் கிரகம் பூமி பெறும் சூரியக் கதிர் வெம்மையுடன் ஒப்பிட்டால் அதில் 43 சதவீதத்தை மட்டுமே பெறுகிறது. எனவே இதன் சராசரி வெப்பநிலை -63 டிகிரி செல்சியஸ் (-81 டிகிரி பாரன்ஹீட்) .
அதேசமயம் அங்கே நீர்ப்பரப்பு இருந்ததாக இதுவரை நடாத்தப்பட்ட கணிப்பீடுகளின்படி தெரியவருகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதன் காரணம் கிரகத்தின் உள்பக்கத்திலிருந்து வெளியேறும் ( geothermal heating) வெம்மையாக இருக்கலாம். அச்சந்தர்ப்பத்தில் உயிரணுக்கள் அங்கே வாழ்ந்திருக்கலாம் என்று கணிப்பிட்டாலும் அந்தக் கடும் குளிரில் அவை செவ்வாயின் மேற்பரப்பில் வாழ்ந்திருக்கச் சந்தர்ப்பமில்லை. அவை நிலமட்டத்தின் கீழே அவை வாழக்கூடிய வெம்மையில் வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என்கிறார்கள் அவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்