பிரெஞ்சு பல்பொருள் அங்காடி நிறுவனம் கர்ரபூர்(Carrefour) அடுத்த ஆண்டு 15,000 இளைஞர்களை வேலைக்கமர்த்தும்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி நிறுவனமான கர்ரபூர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. பிரான்ஸில் மட்டும் சுமார் 105,000 பேர்களை வேலைக்கு வைத்திருக்கும் அவர்கள் உலகம் முழுவதும் சுமார் 321,000 தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறார்கள்.
வரவிருக்கும் ஆண்டில் [2021] இல் தாம் சுமார் 15,000 இளைஞர்களைப் புதியதாக வேலையில் சேர்க்கவிருப்பதாகவும் அவர்களில் பாதிப்பேர் நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் வாழும் சமூகங்களிலிருந்து எடுக்கப்படுவார்கள் என்றும் கர்ரபூர் நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் பொம்பார் தெரிவித்திருக்கிறார்.
“25 வயதுக்குட்பட்டவர்களில் வருடாவருடம் சுமார் 750,000 பேர் புதியதாக வேலைக்குச் சேர்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேலைச்சந்தையில் எப்போதும் கடுமையான நிலைமைதான். அதிலும் கொரோனாத் தலைமுறையினர் நிலைமை மேலும் கடினமானது. பல நிறுவனங்கள் மூடப்பட்டும், செயற்பட முடியாமலும் இருப்பதால் வேலைகள் கிடைப்பது அரியதாகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பிரான்ஸின் பாரிய நிறுவனமான நாங்கள் அசட்டையாக இல்லாமல் வழக்கத்தைவிட 50 % அதிகம் பேரை வேலைக்கமர்த்தத் திட்டமிட்டிருக்கிறோம். அதில் பாதிப்பேர் பின் தங்கிய பகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்படுவார்கள்,” என்கிறார் பொம்பார்.
பிரெஞ்சு பல்பொருள் அங்காடி நிறுவனம் கர்ரபூர் அடுத்த ஆண்டு 15,000 இளைஞர்களை வேலைக்கமர்த்தும்.
சாள்ஸ் ஜெ. போமன்