ஈஸ்டர் தாக்குதல் சந்தேகம்:தாயும் நான்கு மகள்மாரும் கைதாகித் தடுத்துவைப்பு!

பிரான்ஸின் தென் மேற்கில் Devèze நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஒருவரும் அவரது நான்கு மகள்மாரும் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 14 வயதுச் சிறுமி.

வீட்டில் இருந்து உள்ளூர் தயாரிப்பு வெடிப்பொருள்கள் உட்பட ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன என்று செய்
திகள் வெளியாகியிருக்கின்றன. போத்தல்கள், அலுமினியம், சிறிய இரும்புக் குண்டுகள்(போல்ஸ்) என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்களில் 18 வயதுடைய மகள் ஈஸ்டர் பெருநாட்களை ஒட்டி Montpellier பகுதியில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவரது தொலைபேசி உரையாடல்கள், சமூகவலைத்தள பகிர்வுகள், மற்றும் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்பன தேவாலயத்தில் தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். பிரஸ்தாப யுவதி தீவிரவாத இயக்கங்களின் இணை யத்தளங்களை அணுகி இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரது கணனி மற்றும் டிஜிட்டல் சாதனங்களும் கைப்பற்றப் பட்டுள்ளன. தீவிரவாத அமைப்புகளோடு இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

சிறுமி தவிர ஏனைய நால்வரும் மேல திக விசாரணைகளுக்காக உள்நாட்டுப் பாதுகாப்புப் படைப்பிரிவினரால் பாரிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் :கைதுகள் இடம்பெற்ற குடியிருப்பு.
(Google Street View screenshot)

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *