திருவருகைக் கால மூன்றாம் ஞாயிறு-சிறப்பு வெற்றிநடை உரையாடல்
யேசு பிறப்புக்குநத்தாருக்கு முன்னாலிருக்கும் நான்கு வாரங்களும் திருவருகைக் காலமென்று அழைக்கப்படும் என்பது கிறிஸ்தவர்களுக்கு பொதுவாக அறியப்பட்ட விடயம். அந்த நான்கு வார ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த முக்கிய நாளின் எதிர்பார்ப்புக்காகக் கிறீஸ்தவர்கள் தங்களைத் தயார்ப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிறீஸ்துவின் அடிப்படைப் பண்புகளை ஞாபகப்படுத்துகின்றன.
மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்பு என்பதன் அர்த்தம் என்ன, அதை ஒவ்வொரு கிறீஸ்தவரும் தன் வாழ்வில் செயல்படுத்தவேண்டும் என்று சுய பரிசீலனை செய்ய வைக்கிறது.
அன்பு என்ற ஒளியின் எதிர்பார்ப்புக் காலம் பற்றிய ஒரு உரையாடல் மேலே பதிவு செய்யப்பட்ட இணைப்பில் பார்க்க முடியும்.