நைஜீரியாவில் இரண்டாம் நிலைப் பாடசாலையொன்று தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் மறைவு.
நைஜீரியாவின் வடமேற்கிலிருக்கும் கத்ஸீனா மாநிலத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆயுதம் தாங்கிய குற்றவாளிகள் குழுவால் தாக்கப்பட்டுச் சுமார் 400 பேர்களைக் காணவில்லை என்று மாநிலப் பொலீசார் அறிவித்திருக்கிறார்கள். வெள்ளியன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் பின்னர் அருகிலுள்ள காட்டினுள்ளே குறிப்பிட்ட குழுவினருடன் நைஜீரியாவின் இராணுவம் போரிட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதுபோன்று பாடசாலைகள் மீது தாக்குதல் நடாத்திப் பெற்றோர்களிடம் மீட்புத் தொகை கேட்பது சில குழுக்களால் நடாத்தப்படுவது நைஜீரியாவில் அதிகமாகியிருக்கிறது. அதைத் தவிர பொக்கோ ஹ்றாம் என்ற மிலேச்சத்தனமான தீவிரவாதக் குழுவொன்று பிள்ளைகளைக் கடத்திச்சென்று குழந்தைப் போராளிகளாக்குவது நடந்து வருகிறது. 2014 இல் சுமார் 200 சிறுமிகள் கடாத்தப்பட்டு ஒரு வருடத்துக்கும் பின்னால் மீட்கப்பட்ட சம்பவம் உலகமறிந்ததாகும்.