பெரும் தலைகளின் முதலீடுகளால் பலப்படுத்தப்படும் டிக்டொக்கின் இந்திய அவதாரம் “ஜோஷ்”.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் முடக்கப்பட்ட டிக்டொக் செயலிக்குப் பதிலாக உருவெடுத்த இந்தியத் தயாரிப்பான “ஜோஷ்” என்ற பெயரிலான செயலிக்குப் பக்கபலமாகக் கைகொடுக்க கூகுளும், மைக்ரோசொப்ட்டும் முன்வந்திருக்கின்றன.
பங்களூர் நிறுவனமொன்றால் உண்டாக்கப்பட்ட இந்தச் செயலிக்கு 100 மில்லியன் டொலர்களளவில் முதலீடுகள் கிடைத்திருக்கின்றன. அதனால் அந்தச் செயலியை உண்டாக்கிய நிறுவனத்தின் பெறுமதி ஒரு பில்லியன் என்று கணிக்கப்படுகிறது.
அதைத் தவிர “மொய்’’ (Moj) என்ற பெயரில் இன்னுமொரு செயலியும் டிக்டொக் போன்ற சிறிய படங்களை உண்டாக்கிப் பகிர்வதற்காக மேலுமொரு நிறுவனத்தால் உண்டாக்கப்பட்டு வெற்றிகரமாகப் பவனிவருகிறது. மொய், ஜோஷ் ஆகிய இரண்டும் தனித்தனியே சுமார் 50 மில்லியன் பாவனையாளர்களை எட்டியுள்ளன.
சாள்ஸ் ஜெ. போமன்