தனது இணையைப் பறிகொடுத்த அன்னமொன்று ரயில் பாதையருகில் துக்கம் அனுஷ்டித்தது.
மின்சாரக் கம்பியால் தாக்கப்பட்டு இறந்துபோன தனது இணைக்காக ஜேர்மனியில் துரித ரயில்பாதை ஒன்றினருகில் துக்கத்துடன் காத்திருந்த அன்னம் அவ்வழியில் போகும் ரயில்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் அதைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று.
டிசம்பர் மாத ஆரம்பத்தில் இறந்துபோன தனது இணையை அந்தப் பிராந்தியத்தை விட்டு அகலாமலிருந்தது அந்த அன்னப்பறவை. ஜேர்மனியில் Fuldatal என்ற பகுதியில் காத்திருந்த அந்த அன்னத்தை வெவ்வேறு விதமாக அந்த இடத்திலிருந்து அகலவைக்க எடுத்த முயற்சிகளெல்லாம் தோற்றுப்போயின.
எனவே அந்தப் பாதைவழியால் போகும் 23 ரயில்களை நிறுத்திவிட்டு அதைக் காப்பாற்றும் வேலையில் டிசம்பர் 23 ம் திகதியன்று இறங்கினார்கள் காப்பாற்றும் படையினர். அதனால் அப்பகுதியில் போகும் ரயில்களெல்லாம் 50 நிமிடங்கள் தாமதமாகின.
சாள்ஸ் ஜெ. போமன்